[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

’1 மணி நேரத்துக்குள்ள இங்க நிற்கணும்’: எச்சரித்த போலீஸ், சரண்டர் ஆன ஹீரோ!

kannada-actor-duniya-vijay-arrested

பாடிபில்டரை தாக்கியதாக கன்னட ஹீரோவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பிரபல கன்னட ஹீரோ ’துனியா’ விஜய். இவர், மாஸ்திகுடி, துனியா, சங்கர் ஐ.பி.எஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாடி பில்டரும் கூட. பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று முன்தினம் இரவு ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதற்கு நடிகர் ’துனியா’ விஜய், நண்பர்களுடன் சென்றிருந்தார். அங்கு உடற்பயிற்சியாளர் மாருதி கவுடா என்பவரும் சென்றிருந்தார். கவுடா, பிரபல உடற் பயிற்சியாளர் பானிபூரி கிட்டி என்பவரின் உறவினர். பானிபூரி கிட்டி பல நடிகர்களுக்கு உடற்பயிற்சியாளராக இருக்கிறார். ’துனியா’ விஜய்யும் முதலில் அவரிடம்தான் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.

Read Also -> நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்!

இந்நிலையில் அங்கிருந்த மாருதி கவுடாவிடம் பானிபூரி கிட்டி பற்றி ’துனியா’ விஜய் விசாரித்தாராம். பின்னர் பானிபுரியை விஜய் திட்டிய தாகத் தெரிகிறது. இதையடுத்து மாருதி கவுடாவுக்கும் ’துனியா’ விஜய் மற்றும் அவர் நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் ’துனியா’ விஜய் தனது நண்பர்களுடன் மாருதி கவுடாவை தனது காரில் கடத்தி சென்று தாக்கினார்.

இதுபற்றி பானிபூரி கிட்டிக்கு தகவல் தெரிந்ததும் அவர் ஐகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். போலீஸ் அதிகாரி ரவிசங்கர் உடனடியாக ’துனியா’ விஜய்-க்கு போன் செய்தார். ‘இன்னும் ஒரு மணி நேரத்துல மாருதி கவுடாவோட நீங்க இங்க இருக்கணும். இல்லனா, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்றார் அதிகாரி. சொன்னது போலவே ஒரு மணி நேரத்துக்குள் வந்தார் விஜய். அப்போது அங்கிருந்த பானிபூரி கிட்டி, ’துனியா’ விஜய்யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Read Also -> சிட்னி விமான நிலையத்தில் நிறவெறியில் சிக்கிய ஷில்பா! 

பானிபூரி கிட்டியின் ஆதரவாளர்கள் ’துனியா’ விஜயின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் போலீஸ் நிலையம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் துனியா விஜய், அவரது நண்பர்கள் மணி, பிரசாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். துனியா விஜய்யும் அவர் நண்பர்களும் தாக்கியதில் காயமடைந்த மாருதி கவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னட ஹீரோ கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close