[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கேரள மாநிலம் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது; ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்கள்; எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - மு.க.ஸ்டாலின்

“வீட்டு பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும்” - சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

chennai-high-court-warning-to-actor-simbu

முன்பணமாக பெற்ற 50 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்காவிட்டால் வீட்டில் உள்ள மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிம்புவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக நடிகர் சிம்புவிற்கு ஐம்பது லட்சம் ரூபாய் முன் பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி நடிகர் சிம்பு படத்தில் நடிக்கவில்லை. எனவே முன் பணத்தை திரும்பி கேட்டபோது சிம்பு தரப்பில் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து முன் பணத் தொகையை திரும்பி வசூலிக்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறித்த காலத்தில் தயாரிப்பு பணிகளை பட தயாரிப்பு நிறுவனம் துவங்காத காரணத்தினால் தனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டதாகவும், அதனால் முன் பணத்தை முடக்க வேண்டும் என நடிகர் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, பட பணிகள் துவங்காத காரணத்தினால் ஏற்பட்ட இழப்பிற்கான ஆதாரங்களை சிம்பு தரப்பு சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி முன் பணமாகப் பெற்ற 50 லட்சம் ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என நடிகர் சிம்புவிற்கு உத்தரவிட்டார். 4 வாரங்களில் இந்த உத்தரவாதத்தை வழங்காவிடில் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close