[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

“உங்க பட்டியலில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் லஷ்மி”- சூர்யா ஆசை

lakshmi-manchu-meets-suriya-says-she-s-a-fan-of-jyothika

தெலுங்கு நடிகை லஷ்மி மஞ்சுவின் ட்வீட்டிற்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார். 

டோலிவுட் நடிகை லஷ்மி மஞ்சு. இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளியும் கூட. இவர் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். பாலிவுட்டில் வெளியான ‘தும்ஹாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் வித்யா பாலன் நடித்திருந்த கதாப்பாத்திரத்தை தமிழில் ஜோதிகா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை லஷ்மி மஞ்சு கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

அவர் இதுகுறித்து தனது ட்விட்டரில், “பழைய நண்பர்களை தேடிப் பிடித்தேன். எப்போதும் சூர்யா எனது விருப்பத்திற்கு உரிய நடிகர். அவர் சிறந்த மனிதாபிமானி. இப்போது என் மனநிலையை 100 சதவீதம் மாற்றிவிட்டார். என்றும் நான் ஜோதிகாவின் ரசிகர்” என்று கூறியுள்ளார். அதற்கு சூர்யா பதிலளித்துள்ளார். அவர், “உங்களை பார்த்தது நல்லது. ஜோதிகாவுடனான உங்கள் இணைப்பு சிறப்பானது. ஜோதிகா சொன்னார், நீங்களும் ‘காற்றின் மொழி’பட செட்டில் இணைந்தமைக்கு நன்றி. நாம் ஒருபோதும் இருந்ததில்லை. உங்களுடைய விருப்பத்திற்குரியவர் பட்டியலில் என்னை வைத்துக் கொள்ளுங்கள் லஷ்மி” என்று கூறியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close