[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சஞ்சு: ஒரு நடிகனின் அசல் சினிமா!

sanju-an-unknown-fact-of-sanjay-dutt

வாழ்க்கை வரலாறுகளை படமாக்கும் சீசன் இது! இந்தி சினிமாவில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக, விளையாட்டு வீரர்கள், நிஜ தாதாக்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறுகளை படமாக்குவதுதான் சினிமா டிரெண்ட்! ஆனால், சினிமா ஹீரோ, ஹீரோக்களை பற்றிய சினிமாக்கள் குறைவுதான். விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்ட்டில் வந்திருக்கிறது, ’சஞ்சு’. ஒரு நடிகனின் சினிமா!

இந்தி நடிகர் சஞ்சய்தத்தின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் படம். உயிரோடிருக்கும் ஒருவரின் வாழ்க்கையை சினிமாவாக்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். நிஜமான விஷயங்களை அப்படியே எடுத்துவிட முடியாது. புகழ் பாடும் பக்கங்களை மட்டும்தான் கொடுக்க முடியும். அப்படி எடுத்தால் படமும் ஓடாது. சில உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும், அதைத் தாண்டிய சர்ச்சைகள் வேண்டும். அதை படமாக்க வேண்டும் என்றால்  சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி தேவை. அந்த அனுமதியை, ’சஞ்சு’வுக்கு சஞ்சய் தத் கொடுத்திருக்கிறார் என்பதுதான் இந்தப் படத்துக்கு பலம்!

சினிமா குடும்பத்து செல்லப் பிள்ளை சஞ்சய் தத். பணத்தில் குளித்து, பணத்தில் எழுந்தவர். காலையில் மும்பையில் தேநீர் குடித்தால் மறுநாள் லண்டனில் காஸ்ட்லி காபி என்கிற சுக வாழ்க்கை! அப்பா சுனில் தத்தும் அம்மா நர்கிஸும் பாலிவுட் பிரபலங்கள். குழந்தை நடத்திரமாக நடிக்கத் தொடங்கிய சஞ்சய் தத்தின் அம்மா நர்கிஸ் 1981-ல் புற்றுநோயால் இறந்துவிட,அவரின் இறப்பு பாதிக்கத் தொடங்கியது சஞ்சயை. பிறகுதான் அவர் போதைக்குத் திரும்பினார் என்கிறார்கள் பாலிவுட்டில்! பிறகு தீவிரவாத லிங், மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு, சட்டவிரோதமாக ஏகே-56 துப்பாக்கிகளை வைத்திருந்தது என ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தது அவர் மீது. 

சிறைக்கும் சினிமாவுக்கு பாலம் போட்ட மாதிரி, அங்கும் இங்குமாக இருந்து வந்தார் சஞ்சய். சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் ஆறு வருட கடுங்காவல் தண்டனை விதித்தது கோர்ட்! அப்போது கண்ணைப் பொத்திக்கொண்டு சஞ்சய் தத் அழுத அழுகை இருக்கிறதே... ஒரு ஹீரோவை அப்படி பார்க்க முடியவில்லை என்றனர் பாலிவுட் ரசிகர்கள். 

’வாழ்க்கையை பற்றிய பயம் வந்துவிட்டது’ என்று வெளிப்படையாகச் சொன்ன சஞ்சய் தத்துக்குப் பின்னால் ஏகப்பட்ட சர்ச்சைகள், சிக்கல்கள், காதல்கள், மோதல்கள் ஒளிந்திருந்தன! அது அனைத்தையும் வெளிப்படையாகப் படத்தில் சொல்லிவிட முடியாதுதான். ஆனால் சில முக்கிய விஷயங்களை சொல்லியிருக்கிறோம் என்கிறார், ‘சஞ்சு’வை இயக்கியிருக்கும் ராஜ்குமர் ஹிரானி!  இவர் ஏற்கனவே, முன்னா பாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். ’இறுதிச்சுற்று’ படத்தை இந்தியில் ’சாலா கடூஸ்’ என்ற பெயரில் தயாரித்தவர்.

சஞ்சய் தத், தான் காதலிக்கும் பெண்களிடம் சென்டிமென்டாக நிறைய பொய் சொல்லியிருக்கிறார். அதை ராஜ்குமார் ஹிரானி இப்படி சொல்கிறார்:

(ராஜ்குமார் ஹிரானி, ரன்பிர் கபூர்)

’தான் டேட் செய்யும் பெண்ணை, கல்லறைக்கு அழைத்துச் செல்வார் சஞ்சய். இதுதான் என் அம்மாவோட கல்லறை’ என்பார். ’ஏன் இங்க உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன் தெரியுமா, நீ என் அம்மாவை பார்க்கணும்’ என்பார். இதை எதிர்பார்க்காத அந்தப் பெண்ணும் எமோஷனாகி சஞ்சய்யுடன் நெருங்கி விடுவார். ஆனால் உண்மையில் அது அவர் அம்மாவின் கல்லறை கிடையாது’.சஞ்சய் தத்துக்கு சீனியர், ஜூனியர், சக நடிகைகள் என 300 பேருக்கு மேல் காதலிகள் இருந்திருக்கிறார்கள். அதையும் படத்தில் சொல்கிறார்களாம்!

எரவாடா சிறையில் சஞ்சய் தத்துக்கு ஒருவரை உதவியாக நியமித்தார்களாம். எப்போதெல்லாம் சஞ்சய், தாடி, மீசையை சவரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போதெல்லாம் செய்ய வேண்டும் என்பது அவர் வேலை. சஞ்சய், தேவைப்படும்போது அவரை அழைத்திருக்கிறார். ஒரு நாள், ‘நீ ஏன் ஜெயிலுக்கு வந்தே?’ என்று கதை கேட்டார் சஞ்சய். ’சும்மா கோபத்துல பொண்டாட்டியோட கழுத்தை கத்தியால அறுத்துட்டேன்’  என்று சொன்னார் அவர். அன்றிலிருந்து அவனிடம் ஷேவ் செய்வதையே நிறுத்திவிட்டார் சஞ்சய். ஏனென்று அவன் கேட்டதற்கு, ‘அடுத்தப்படத்துக்கு நிறைய தாடி, மீசை தேவையா இருக்கு’ என்று சொன்னாராம்!

இதே போல ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்களும் படத்தில் இருக்கிறது என்கிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. படத்தில் ’சஞ்சு’வாக நடித்திருக்கும் ரன்பீர் கபூர், அப்படியே சஞ்சய் தத்தை பிரதிபலிப்பது படத்துக்கான முதல் வெற்றி என்கிறது பாலிவுட்!

மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத் அம்மாவாகவும் தியா மிர்ஸா மனைவி மான்யதாவாகவும் சோனம் கபூர் காதலியாகவும் ஜிம் சார்ப், சல்மான் கானாகவும் நடித்திருக்கிறார்கள் படத்தில்! படத்துக்கு ஒளிப்பதிவு நம்மூர் ரவிவர்மன்! வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது படம். 

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத சஞ்சய் வாழ்க்கை கதையில், வேறென்ன சர்ச்சை என்பது ரிலீஸுக்குப் பிறகுதான் தெரியவரும்!


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close