[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருட்டு!

gold-biscut-stolen-from-actor-parthipans-house

சென்னையில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

’புதிய பாதை’ படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். தொடர்ந்து, பொண்டாட்டி தேவை, ஹவுஸ்புல், குடைக்குள் மழை, இவன் உட்பட பல படங்களை இயக்கி நடித்துள்ள இவர், திருவான்மியூரில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில்தான் இவரது மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் நடிகர் பார்த்திபன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அதில், வீட்டில் பீரோவில் இருந்த தங்கக் கட்டிகளைக் காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் உள்ள வேலையாட்கள் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close