[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

கபாலி டீசர்: மகிழ்ச்சி.... நெருப்புடா....சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் கலக்கிய ரஜினி...

rajinikanth-kabali-teaser-review

ரஜினி நடிப்பில் உருவாகி‌யிருக்கும் கபாலி திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த டீசர் வெளியான சில நிமிடங்களில் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ‌ட்ரெண்டாக மாறியுள்ளது. வெளியான கால் மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் டீசரைப் பார்த்திருக்கின்றனர்.

. படத்தில் டானாக நடித்துள்ள ரஜினி, தனது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார் என்றே சொல்லாம். டீசரில் ஒவ்வொரு காட்சியிலும், தனது நடிப்பில் பழைய ஆளுமையை வெளிகொண்டு வந்துள்ளார். .... டீசரில் வரும் ஒரு காட்சியில்....’கபாலி யாருடா , வர சொல்லுடா அவன’ என்று வில்லன் கேட்கிறார். அதற்கு அடுத்து வரும் காட்சியில் ரஜினி பேசுகையில், ‘தமிழ் படங்களில் இங்க(முகத்தில) மரு வச்சுக்கிட்டு, மீசய முருக்கிக்கிட்டு, லுங்கிய கட்டிக்கிட்டு, ஏ கபாலி என்று நம்பியார் கூப்பிட்டவுடனே, சொல்லுங்க எஜமா என்று அப்படி வந்து நிப்பான்னு பாத்தியா’... கபாலிடா... என்று அவர் பேசும் பஞ்ச் வசனம், இந்த டிரண்டுக்கு ஏற்றார் போல் கூறுவது என்றால், தெறிக்கவிட்டுள்ளார் என்றே கூறலாம். கபாலி டீசர் ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த விருந்து என்பதை உறுதியாக கூறலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close