[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

தயாரிப்பாளர் ’பட்டியல்’ சேகர் காலமானார்

pattiyal-sekar-passes-away-in-chennai

நடிகர் கிருஷ்ணா, இயக்குநர் விஷ்ணுவர்தன் ஆகியோர் தந்தையும் படத் தயாரிப்பாளருமான ‘பட்டியல்’ சேகர் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 63.

பரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கிய 'பட்டியல்', கிருஷ்ணா நடித்த 'அலிபாபா' ,'கழுகு' உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சேகர். பட்டியல் படத்துக்கு பிறகு ’பட்டியல்’ சேகர் என்று அழைக்கப்பட்டார். 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close