[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்
  • BREAKING-NEWS காரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்

வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த விவேக்!

vivek-support-to-vairamuthu

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியக் கட்டுரை பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் விவேக் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதியக் கட்டுரையில் தெரிவித்திருந்த கருத்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கட்டுரைக்கு பாரதிய ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆண்டாளை தவறாக பேசியுள்ள வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பெரும் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிருந்தார். 

இந்நிலையில், நடிகர் விவேக் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் “ அனைத்து மத ஆன்மிக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும்.தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி.ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது.கவிப்பேரரசு மன்னிப்புக் கேட்பதும்;அந்தப் பெருங் கவியை மன்னித்தலும் பண்பாடு” என்று பதிவிட்டுள்ளார். அதே போல், ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்திருப்பதை போல்,  வைரமுத்துவை கடுமையாக விமர்சித்த ஹெச் ராஜாவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close