[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
சினிமா 14 Dec, 2017 05:41 PM

என் பங்குக்கு கொஞ்சம் காமெடி செய்திருக்கிறேன்: நடிகர் அரவிந்த்சாமி

bhaskar-oru-rascal-audio-factions

ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 

விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் தாயார் ஜெயச்சித்ரா உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, "இந்தப் படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு இயக்குனர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்  இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனுக்கு இது 500 ஆவது படம். அதில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது. அவர்களுடன் நானும் சேர்ந்து கொஞ்சம் காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன்." என்று கூறினார். 

ஜெயச் சித்ரா," எனது மகன் அம்ரேஷ், மூன்றாவது முறையாக இந்தப் பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவனது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டினார்கள். அதை கேட்கும்போது பெருமையாக உள்ளது. இந்தப் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்" என்று கூறினார். 

போட்டோ கேலரி

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close