[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சினிமா 07 Dec, 2017 05:08 PM

நான் நல்லவன் என்று சொல்லவில்லை: சிம்பு ஓபன் டாக் 

santhanam-audio-function-simbu-apology

சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிம்பு, நான் நல்லவன் என்று சொல்லவில்லை என தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் தனக்கு 23 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சிம்பு நடித்து தருவதாக கூறியிருந்த இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மறுப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் மைகல் ராயப்பன் குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்தப் புகார் குறித்து நடிகர் சிம்பு மறுப்பு எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் ’சக்கப் போடு போடு ராஜா’ இசை வெளிட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு ”என்னைப்பற்றி கடந்த சில நாட்களாக சில பிரச்சனைகள் பேசப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் பொய் என்று கூறமாட்டேன். என்னுடைய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் என் மீது தவறு இருந்தால் அதை பட ஷூட்டிங் போதே சொல்லியிருக்கலாம். அல்லது அந்தப் பட ஷூட்டிங் முடிந்த பிறகாவது சொல்லியிருக்கலாம். இல்லை படம் வெளியான உடனேயே சொல்லியிருக்கலாம். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு ஆறுமாதம் கழித்து அதை பற்றி தயாரிப்பாளர் பேசுவது வருத்தமாக இருக்கிறது. என் மீதும் தவறு உள்ளது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்தப் பிரச்னை பற்றி பேசுவதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அதற்காக நான் தப்பே செய்யவில்லை. நல்லவன் என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் செய்து வருவது சரியல்ல; நடந்த விஷயங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுப் பேசினார்.    

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close