[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

ஒரு கோடியை தொட்டது சூர்யாவின் சொடக்கு சாங்

surya-s-sodakku-special-poster-one-curose-crossed

நடிகர் சூர்யாவின் ‘சொடக்கு’ பாடல் யுடியூப்-ல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடித்து வெளியாக இருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்றுள்ள 'சொடக்கு' என்ற பாடலின் டீசர் கடந்த அக்டோபர் 16 அன்று வெளியானது. 
இதற்கு அனிருத் இசைமைத்திருந்தார். இதன் முன்பே வெளியான "நானா தானா வீணா போன" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளையொட்டி இரண்டாவது பாடலின் 'சொடக்கு’ டீஸரை நள்ளிரவில் வெளியிட்டிருந்தனர். இதில் இடம்பெற்றிருந்த ‘சொடக்கு மேல சொடக்கு போடுது.. என் விரலு வந்து’ பாடலுக்கான வரிகளை மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தனர். கிராமிய குரலில் கனீரென்று ஒலித்த அப்பாடல் பட்டித் தொட்டி முழுக்க கட்டி ஆண்டது. இந்தப் பாடலின் வரிகளை வைத்து பல ரீமேக் வீடியோக்கள் வெளியாகின. 

இந்நிலையில் இந்தப் பாடலின் டீசர் யுடியூப்-ல்(youtube) ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் தமிழ அளவில் ‘சொடக்கு’ பாடலை பற்றிய செய்திகள் ட்விட்டரில் இன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close