[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

சாம்பிகா என்றால் என்ன? விளக்குகிறார் ’அண்ணாதுரை’ ஹீரோயின்

actress-diana-champika-speaks-about-annadurai

விஜய் ஆண்டனி, டயனா சம்பிகா நடித்துள்ள படம், ’அண்ணாதுரை’. விஜய் ஆண்டனியின் பிலிம் கார்பரேஷன் நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ஆர். ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராதாரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜிவெல் மேரி, ரிந்து ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படம் பற்றி டயனா கூறும்போது, ’சம்பிகா என்றால் இளவரசி என்று அர்த்தம். அப்படித்தான் வாழ விரும்புகிறேன். என்னை கதாநாயகியாக தேர்ந்து எடுத்த பாத்திமா விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்தப் படத்தில் ரேவதி என்ற கேரக்டரில் நடிக்கிறேன்.  பெயர் ராசியோ என்னவோ படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் ஸ்ரீனிவாசன் முக்கிய காரணம். இயல்பாக நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஸ்ரீதேவி போல ஸ்டைல், நயன்தாரா போல திரை ஆளுமை, த்ரிஷா போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா பச்சன் போல அனைவரையும் கவரும் வண்ணம் திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பது ஆசை. அது நிறைவேறும்’ என்கிறார் டயானா சம்பிகா. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close