[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

பாடகியாக களமிறங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்தி..!

ms-subbulakshmi-great-grand-daughter-makes-singing-debut

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்தியான ஐஸ்வர்யா பாடகியாக களம் இறங்கியுள்ளார்.

தனது வசீகரக் குரலால் இந்தியாவின் நைட்டிங்கேலாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இசைத் துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி அனைத்து ரசிகர்களையும் தனது காந்த குரலால் கவர்ந்தார். பாரதியாரின் தேசபக்திப் பாடல்களையும், பக்தி பாடல்களையும் உணர்வுப்பூர்வமாகப் பாடியவர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்.

இந்நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்தியான ஐஸ்வர்யாவும் பாடகியாக களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் உமாஷங்கர் இயக்கும் படம் 'குரல் 146'. குரு கல்யாண் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மொத்தமாக 5 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் முதல் பாடல் நேற்று ரெக்கார்டிங் செய்யப்பட்டது. பாடலை ஐஸ்வர்யா மற்று குரு கல்யாண் இணைந்து பாடியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close