[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

என் மொழியில் பக்கா மெட்ராஸ் வாடை வீசும்: ஐஸ்வர்யா ராஜேஷ்

i-really-like-is-that-vetri-sir-s-films-are-realistic-ishwarya-rajesh

வடசென்னையில் என் மொழியில் பக்கா மெட்ராஸ் வாடை வீசும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படம் சில வருடங்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிக்கிறார். காக்கா முட்டைக்கு பிறகு சிறந்த நடிகையாக பேசப்பட்ட இவர். எனவே அவரது கதாப்பாத்திரம் அதிக ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்தப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா, “வடசென்னையில் நான் மெட்ராஸ் லோக்கல் பெண்ணாக நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாப்பாத்திரத்தின் மூலம் நான் என் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறேன். இந்தப்படம் எனக்கு வித்தியாசமான படமாக இருக்கும். தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் முதல்முறையாக வேலை பார்க்கிறேன். வெற்றிமாறன் மிக யதார்த்தமான டைரக்டர். வடசென்னை காட்சிக்கு காட்சி உண்மையாக இருக்கும். இதற்காக காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் நிஜமாக ஷூட்டிங் செய்தோம். என்னை அப்பட்டமான ஒரு சென்னை பெண்ணாக காட்டி இருக்கிறார்கள். என் பாடிலாங்வேஜும் கூட புதியதாக இருக்கும். என் மொழி, உச்சரிப்பு எல்லாவற்றிலும் அப்படியே வடசென்னை வாடை வீசும். இந்தப் படத்தை பெரிய செலவில் எடுக்கிறார்கள். ஆண்ட்ரியா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close