[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்
  • BREAKING-NEWS அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நான் பூ அல்ல விதை; என்னை முகர்ந்து பார்க்காதீர்கள் விதைத்து பாருங்கள் வளருவேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்

பிரபல இயக்குனர் ஐ.வி.சசி காலமானார்

director-i-v-sasi-dead

பிரபல திரைப்பட இயக்குனர் ஐ.வி.சசி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. 

1970 மற்றும் 80-களில் பிரபலமாக இருந்தவர் மலையாள இயக்குனர் ஐ.வி.சசி. இவர், 

தமிழில், கமல், ரஜினி இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’, விஜயகுமார், ஸ்ரீதேவி நடித்த, ’பகலில் ஒரு இரவு’, கமல்ஹாசன் நடித்த குரு, ரஜினிகாந்த் நடித்த ’எல்லாம் உன் கைராசி’, காளி, ஜெயராம் நடித்த ’கோலங்கள்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது படங்களில் ஹீரோயினாக நடித்த சீமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சசி, இயக்கிய 30 படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சீமா. மலையாளம், இந்தி உட்பட சுமார் 150 படங்களை இயக்கியுள்ளார் ஐ.வி.சசி. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த இயக்குனர் ஐ.வி. சசிக்கு அனு என்ற மகளும் அனி என்ற மகனும் உள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close