[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
சினிமா 29 Aug, 2017 11:00 AM

திலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

actor-dileep-s-bail-plea-rejected-by-kerala-high-court-again

நடிகை கடத்தி பாலியல் வன்முறை செய்யபட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் இன்று மீண்டும் தள்ளுபடி செய்தது.

பிரபல நடிகை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பபட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல்  நிறைவடைந்ததை அடுத்து மாஜிஸ்திரேட் அவரது காவலை வருகிற 2-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் நடிகர் திலீப் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திலீப்புக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டது.
அதன்படி, இன்று காலை ஜாமின் மனு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஏற்கனவே அங்கமாலி நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை ஜூலை 15-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close