[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

செப்.1 ஆம் தேதி திருட்டுப்பயலே-2 இசை வெளியீடு

september-1-thiruttupayalae-2-music-release

இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் ஆடியோ செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசிகணேசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திருட்டுப்பயலே படத்தில் நடிகர் ஜீவன், சோனியா அகர்வால் மற்றும் மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி சில வாரங்களுக்கு முன்  வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் பாபிசிம்ஹா, அமலாபால் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ஆடியோ செப்டம்பர் 1 ஆம் தேதி ஃபோரோம் மாலில் மாலை 7:00 மணிக்கு வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close