[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

என்னைப் பார்த்து சிரிக்கணும்: அடம்பிடிக்கும் அனிமல் ஸ்டார்!

mattukku-naan-adimai

’அனிமல் ஸ்டார்’ என்று தனக்குத்தானே அடைமொழி கொடுத்துக்கொண்டு ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் சம்பார் ராசன் என்பவர். இவர் நடிக்கும் படத்துக்கு ‘மாட்டுக்கு நான் அடிமை’ என்று டைட்டில். 

’ஏன் இந்த கொலைவெறி? என்று கேட்டால், ’மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அதனாலதான் இந்த டைட்டில்’ என்கிறார். 

அப்போ சாம்பார் ராசன்? ’நம் மக்கள் சாம்பார் பிரியர்கள். எல்லோர் வீட்டிலும் சாம்பார் தவறாமல் இடம்பெறும் இல்லையா? அந்தமாதிரி எல்லோர் மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே,  பெயரையே இப்படி மாற்றி கெஜட்டிலும் பதிந்துவிட்டேன்’ என ஆச்சர்யப்படுத்துகிறார். 

இவர் அடித்துச் சொல்லும் இன்னொரு விஷயம், ‘என்னை மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது’ என்பது. வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டாராம். ஹீரோவாக மட்டும் தான் நடிப்பாராம். இதையெல்லாம் சீரியசாகத்தான் சொல்கிறாரா? என்றால், ‘ஆமா. சீரியஸ்தான். என்னைப் பார்த்து எல்லோரும் சிரிக்கணும்’ என்கிறார்.

இதில் இவருக்கு 2 ஹீரோயின்கள். ஒருவர், ‘கோலிசோடா’ சீதா, இன்னொருவர் சௌந்தர்யா. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close