[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ரிசார்ட்டில் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,309 கன அடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனோகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
 • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
 • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை: ரூ.71.37 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 60.06 காசுகளாகவும் உள்ளது
 • BREAKING-NEWS திருவாரூர்: மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை
 • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு உடல்நலக்குறைவு
 • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
 • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
 • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
 • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
 • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சினிமா 07 Aug, 2017 05:42 PM

வெளியானது ‘விவேகம்’ பாடல்கள்: அஜித் ரசிகர்கள் உற்சாகம்

vivegam-songs-released-ajith-fans-are-enthusiastic

அஜித், சிவா, அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் பாடல்கள் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

ஏற்கனவே, தனித்தனியாக மூன்று பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் இன்று தீம் சாங் உட்பட ஏழு பாடல்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. வேதாளம் படத்தைத் தொடர்ந்து, விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். ஒலியமைப்பில் பல்வேறு புதுமைகளோடு இந்தப் பாடல்கள் உருவாகியுள்ளன. விவேகம் பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா உற்சாகம் அடைந்துள்ளனர்.

விவேகம் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ‘சர்வைவா’ பாடலை அனிருத்துடன் யோகி.பி, மாலி மனோஜ் ஆகியோர் பாடியுள்ளனர். ‘தலை.. விடுதலை’ பாடலை அனிருத்துடன் ஹாரிஷ் ஸ்வாமிநாதன் பாடியுள்ளார். காதலாட பாடலை ஷாசா திருப்பதி, ப்ரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர். 1.24 நிமிடம் கொண்ட ஏகே தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது. 
வெறியேற பாடலை பூர்வி கெளடிஷ், எம்.எம்.மானசி ஆகியோர் பாடியுள்ளனர். நெவர் கிவ் அப் பாடலை ராஜகுமாரியுடன் அனிருத் பாடியுள்ளார்.

அஜித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். காஜல் அகர்வால் மற்றும் அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close