[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம்: 5 பேரிடம் விசாரணை

kalabhavan-mani-death-police-register-malayalam-actor-death-as-unnatural

நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து சக நடிகர் ஜாஃபர் உள்ளிட்ட 5 பேரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலாபவன் மணி, நேற்றிரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் மெத்தனால் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கலாபவன் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள அரசு, திருச்சூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுகேசன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இது குறித்து தடயவியல் துறையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கலாபவன் மணியின் உடல் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாலக்குடியில் மாலை 5.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.

வரும் சட்டப்பேரவைத் ‌தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்காக கலாபவன் மணி பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அக்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close