[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தெர்மாகோல் ஐடியா, அப்பவே ஏன் தோணலை? ராதாரவி குபுக்

radharavi-criticises-sellur-raju

ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ . எம்.ஆர்.ராதாவின் பேரன், ஐக் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது ராதாரவி பேசும்போது, ‘ இங்க கமல் தெர்மாகோல்னு சொன்னதும் நான் நினைச்சேன். அந்த தர்மாகோலை அந்த அம்மா (ஜெயலலிதா) மேல போட்டிருந்தா, அவங்க ஆவி போயிருக்காதுல்ல. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல. அந்த தர்மாகோல் ஐடியா செல்லூர் ராஜூக்கு அப்பவே ஏன் வரலை, இப்ப வந்திருக்கேன்னு வருத்தமா இருக்கு. ஏன்னா, நான் அந்தம்மாவை நம்பிதான் இருந்தேன். அதனாலதான் சொன்னேன். இப்பலாம் வாரிசு சீசன். வாரிசு வர்றாங்கள்ல, அரசியல்ல வர்றாங்க... ஓட்டல்ல வர்றாங்க... இப்ப பாருங்க, சரவணா ஸ்டோர்லயே வர்றாங்க. அவரு ஆடும்போதே நினைச்சேன், சினிமாவுக்கு வரப்போறார்னு. என்ன பண்ண, சினிமா கெட்டுப்போச்சு. சரி, அதை விடுங்க. இப்படிச் சொன்னா, இவராலதான் சினிமா கெட்டுப்போச்சுன்னு ராதாரவி சொன்னார்னு தலைப்பு செய்தியில போட்டுருவாங்க. அவருதான் ஏதோ சலுகை விலையில பொருள் கொடுத்துட்டு இருக்காப்ல, அதை கெடுத்துடாதீங்க. இந்தப் படத்தோட டைரக்டர், ஐயப்பன்ங்கற பெயரை ஐக் அப்படின்னு மாற்றி வச்சிருக்கான். நல்லா வந்திருக்கு’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close