[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

செல்வராகவன்- யுவன் கூட்டணியில் உருவாகும் 'நெஞ்சம் மறப்பதில்லை'..நாளை இசை வெளியீடு..!

nenjam-marappathillai-audio-lunch-from-tomorrow

10 வருடங்களுக்கு பின் இயக்குனர் செல்வராகவன் இசையமைப்பாளர் யுவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் திகில் கதை அம்சம் கொண்ட பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை மிரள வைத்தது. இதனையடுத்து, இப்படத்தின் இசை நாளை வெளியாகிறது.

’புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close