[X] Close
JUST IN

யுத்தத்துக்குத் தயாராகும் அமீர்கான்

dangal-in-other-tamil-and-telugu

ஹரியானா மல்யுத்த வீரரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள அமீர்கானின் டங்கல் படம், ’யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் பேச வருகிறது.

’த்ரீ இடியட்ஸ்’ படத்தைத் தொடர்ந்து அமீர்கானுக்கு தென்னிந்தியாவிலும் பரவலான ரசிகர் வட்டாரம் உள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் டங்கல் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியிட உள்ளனர். யுத்தம் என்ற பெயரில் தமிழ் பேசும் இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் தற்போது வெளியாகியுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த மஹாவீர் சிங் ஃபோகத் என்னும் மல்யுத்த வீரரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவியே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு பெண் குழந்தைகளுடன் மஹாவீர் சிங்காக அமீர்கான் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

சர்வதேச மல்யுத்த வீரராக ஜொலிக்க முடியாமல் போன கனவை, தனது மகன்கள் மூலம் நனவாக்க முயற்சிக்கும் மஹாவீர் சிங்குக்குப் பிறப்பது நான்கு பெண் குழந்தைகள். பெண் குழந்தைகள் மூலம் மஹாவீர் எவ்வாறு தனது கனவை நிறைவேற்றுகிறார் என்ற மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மஹாவிர் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார் அமீர்கான். டங்கல் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் டிசம்பர் 23ம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close