[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

விஜய்சேதுபதி படத்துக்கு சர்வதேச கவுரவம்

vijaysethupathi-s-movie-got-award

விஜய்சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது.

பயோஸ்கோப் சர்வதேச திரைப்பட விழா கடந்த 8- ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை பஞ்சாப்பில் நடைபெற்றது. இதில் போட்டி பிரிவில் இடம் பெற்ற ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்துக்கு ஒளிப்பதிவாளர் ’தேனி’ ஈஸ்வருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்துள்ளது. படம் வெளிவராத நிலையில் இப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆரஞ்ச் மிட்டாய் படத்துக்குப் பிறகு விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது படமான இப்படத்தில் அறிமுக நாயகர்கள் நடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் நடைபெற்ற 21- வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 திரைப்படங்களில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படமும் ஒன்று. அதனை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற பயோஸ்கோப் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதோடு, விருதையும் வென்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close