[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

'கதாநாயகனில்' கலக்க வரும் விஜய் சேதுபதி

vijay-sethupathi-in-kathanayagan-movie

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘கதாநாயகன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் கலக்க வருகிறார்.

புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரேசா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படம் ‘கதாநாயகன்’. முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் வெளியாக இருக்கிறது. மெட்ராஸ் படத்தில் பெற்றதை போல எப்படியாவது இப்படத்திலும் நல்ல பெயரை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் கேத்ரின் தெரேசா.

இதில் புது தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் எல்லா படங்ளுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் இப்படமும் நிச்சயம் வெற்றி பெறும் என படக்குழுவினர் கருதுகிறார்களாம்.

தமிழில் ஏற்கனவே பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘கதாநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து தலைப்புக்கான உரிமையை வாங்கி தங்களுடைய படத்துக்கு சூட்டியிருக்கிறது இப்படக்குழு என்பது கூடுதல் தகவல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close