[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

அண்ணா- கருணாநிதி இணைந்து படைத்த 'ரங்கோன் ராதா'.. 60 ஆண்டுகளை எட்டியது

rangoon-radha-1956

அறிஞர் அண்ணாவின் அரசியல் வாழ்க்கையை தவிர, அவர் நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ‘ரங்கோன் ராதா’ 1956-ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் அதாவது நவம்பர் மாதம் 1-ஆம் தேதி தான் திரைப்படமாக வெளிவந்தது.

தமிழக முன்னாள் முதலமைச்சரான அறிஞர் அண்ணா, அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றல் பெற்றவர். பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார். வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.

அறிஞர் அண்ணாவின் கதையான ‘ரங்கோன் ராதா’ இதே தினத்தில் தான் திரைப்படமாக வெளிவந்தது. ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் 1956-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், பி. பானுமதி, எம்.என்.ராஜம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தினர். இப்படத்திற்கு தற்போதைய திமுக தலைவரான மு.கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.

1952-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. இருந்தாலும் சிவாஜி கணேசனுக்கு அவர் நினைத்தது போல் அடுத்தடுத்த படியாக வாய்ப்புகள் வரவில்லை. எனவே வில்லன் கேரக்டர்களிலும் துணிந்து நடித்தார். அந்த நாள், திரும்பி பார், துளி விஷம், ரங்கோன் ராதா போன்ற போடங்களில் அவர் வில்லன் கேரக்டர்களில் நடித்து உள்ளார். ரங்கோன் ராதா படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பும், அவரது வார்த்தை உச்சரிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

படம் வெளிவந்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகியும் அறிஞர் அண்ணாவின் கதையும், கருணாநிதியின் திரைக்கதையும், சிவாஜி கணேசனின் நடிப்பும் இன்று வரை மக்கள் மனதில் மறையாமல் இருப்பதே இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close