[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

தோனி எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வர வேண்டும்: சூர்யா அழைப்பு

msdhoni-next-time-dinner-at-our-place-called-actor-surya

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் நிரஞ்பாண்டே என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தோனி நேரில் வந்து படத்தில் உள்ள சில சாராம்சங்களை தனது ரசிகர்கள் முன் எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் படத்தின் நடிகர் சுஷான்சிங் பங்கேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினாராக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும், அவரது குழந்தைகள் தியா, தேவும் கலந்துக்கொண்டனர். தியா, தேவ் இருவரும் தோனிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க, தோனி மேடையிலேயே ‘நான் உங்க அப்பாவுடைய ரசிகன்’ என கூறினார்.

தொடர்ந்து நடிகர் சூரியாவின் மகள் தியா, கேள்விக்கு பதிலளிக்கும் போது நான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் பெற்றோரின் சொல்படி நடந்ததும் ஆசிரியர் வழிகாட்டுதலுமே என்று தோனி கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘எனக்கு சென்னை இரண்டாவது தாய் நகரம். சென்னையையும் சென்னை மக்களையும் மிகவும் பிடிக்கும். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றார்.

தனது குழந்தைகளுடன் விழாவில் மகிழ்ச்சியுடன் பேசிய தோனிக்கு நடிகர் சூர்யா டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அடுத்த முறை தங்கள் வீட்டிற்கு விருந்து வரவேண்டும் என்றும் சூர்யாவிற்கு தோனி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close