[X] Close

திருச்சி: காருக்குள் முகக்கவசம் அணியாமல் வந்த தம்பதி.. அபராதம் கட்ட மறுத்து வாக்குவாதம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Fine-imposed-for-not-wearing-mask-inside-car-in-Trichy

திருச்சியில் காருக்குள் முகக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்ற இருவருக்கு அபராதம் விதித்ததால், அதனை செலுத்த முடியாது எனக்கூறி காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் மஞ்சத்திடல் பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது, காரில் வந்த இருவர், முகக்கவசம் அணியாததால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டும் என காவல்துறையினர் வற்புறுத்தினர். ஆவேசமடைந்த இருவரும் காருக்குள் முகக்கவசம் அணியவேண்டும் என விதிமுறை ஏதும் இல்லை எனக்கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அபராதத்தை கட்ட முடியாது எனக்கூறி, இருவரும் காரில் ஏறிச்சென்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close