[X] Close

“தோனியை அடுத்து சென்னை அணியை வழிநடத்த ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கலாம்” - மைக்கேல் வாகன்

ஐபிஎல் திருவிழா

After-MS-Dhoni-CSK-Team-may-build-a-team-around-Ravindra-Jadeja-says-Michael-Vaughan-IPL-2021

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தோனியின் ஓய்வை அடுத்து சென்னை அணியை ஜடேஜாவை சார்ந்து அமைக்கலாம் என தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 200 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தி உள்ளார் தோனி. அதோடு மூன்று முறை சாம்பியன் பட்டத்தையும் அணிக்காக பெற்று தந்துள்ளார். 


Advertisement

இந்நிலையில், மைக்கேல் வாகன் “தோனி மேலும் இரண்டு அல்லது மூன்று சீசன்கள் இருப்பார் என எல்லோரும் கருதலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால். எனக்கு தெரிந்து அவர் அப்படி செய்யமாட்டார். அதனால் அணியை திறம்பட முன்னின்று வழிநடத்தி செல்லும் வீரரை அடையாளம் காண வேண்டியுள்ளது. என்னை கேட்டால் ஜடேஜாவை சார்ந்து அணியை அமைக்கலாம் அல்லது உருவாக்கலாம். அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என சகல விஷயத்திலும் வல்லவர். ஆட்டத்தின் மீது அவரது அணுகுமுறையும் அற்புதமாக உள்ளது” என தெரிவித்துள்ளார். 

image


Advertisement

சென்னை அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் ரெய்னா, டூப்ளசிஸ் இருக்கையில் இப்போது ஜடேஜாவும் இணைந்துள்ளார். இதில் யார் அடுத்த கேப்டன் என்பது இப்போதைக்கு சஸ்பென்சாக உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close