தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி அமர்வு அரியர் வழக்கை விசாரித்து வந்தது. இதில் ஆஜராவதற்காக வந்த அரசு தலைமை வழக்கறிஞரிடம் தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவி வருவதாகவும் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தடுப்பூசி குறித்து வரும் செய்திகள் உண்மையா எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், “தற்போது தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. ஆனால் கொரோனா 2வது அலை கைமீறிச் சென்றுவிட்டது” எனத் தெரிவித்தார். நீதிமன்றங்களில் எந்த மாதிரியான தடுப்பு வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்க அரசு தயாரா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக அரசு சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிப்பார் என வழக்கறிஞர் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்றே சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!