Published : 24,Jul 2017 01:06 PM

அரசியலில் களமிறங்கினார் பிக்பாஸ் நடத்துனர்

bigg-boss-hoster-in-politics

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அரசியலுக்கும் அப்படி என்ன பந்தமோ தெரியவில்லை... தமிழில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டில் அமைச்சர்களுக்கு எதிராக ட்விட்டர் பதிவுகள் போட்டு தமிழக அரசியல் களத்தை சூடேற்றி வருகிறார் கமல். அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற விவாதம் வலுத்து வருகிறது. 

ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திவரும் ஜூனியர் என்.டி.ஆர் அரசிலில் இறங்கியதோடு கட்சிப்பெயரையும் அறிவித்து விட்டார்.  சம சமாஜ் கட்சி என அவர் தமது கட்சிக்குப் பெயர் சூட்டியுள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜெய் லவகுசா  படத்தில் ஜெய், லவ குமார், குசா ஆகிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இதில், ஜெய் பாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இந்தப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் தனது கட்சிப்பெயரை அறிவித்துள்ளார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் கட்சி கட்டமைப்பு பணிகளில் அவர் தாமதமாக ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்