[X] Close

சிவகங்கை: கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்

தமிழ்நாடு

Sivagangai-A-car-lost-control-and-crashed-3-killed

காளையார்கோவில் அருகே கார் நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மதுரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 11 பேர் காரில் சென்று கொண்டிருநதனர்.

கார் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உழவூரணி என்னும் இடத்தில் இருந்த வளைவில் திரும்பும் போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


Advertisement

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி அல்லிராணி, ஆறுமுகம், ராஜா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்கப்பட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து காளையார்கோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close