[X] Close

எல்லைப் பதற்றத்தை தணிக்க இந்தியா - சீனா இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை!

இந்தியா

India--China-to-hold-11th-round-of-talks

எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 11-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.


Advertisement

‌இந்தியா - சீனா எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் கடந்தாண்டு ஜூன் மாதம் இருநாட்டு படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இது இருநாட்டு உறவில் சீர்குலைவை ஏற்படுத்திய நிலையில் பிறகு நிலைமை ஓரளவு சரியாகி சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் பலனாக எல்லையில் உள்ள பங்கோங் சோ ஏரிக்கரையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன.

அடுத்தக்கட்ட படை விலக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே 11-ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில், இந்திய தரப்பில் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் குழு பங்கேற்கிறது.


Advertisement

> தொடர்புடைய செய்திக் கட்டுரை: சீனாவுடன் மீண்டும் பேச்சு: எல்லையில் 'அமைதி'யும் இந்தியாவின் 'இருமுனை' வியூகமும்!


Advertisement

Advertisement
[X] Close