Published : 08,Apr 2021 04:48 PM

“சி.எஸ்.கே உடன் தோனிக்கு இது தான் கடைசி ஆண்டு என்று நினைக்க வேண்டாம்!” - காசி விஸ்வநாதன்

This-is-not-the-last-season-for-MS-Dhoni-with-CSK-Team-and-I-think-so-says-the-Team-S-CEO-Kasi-Viswanathan

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மகேந்திர சிங் தோனிக்கு இது தான் கடைசி ஆண்டு என்று நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் தோனி சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தொடர்ந்து கடந்த ஐபிஎல் சீசன் முடிவின் போது அவரிடம் “இதுதான் உங்களது கடைசி ஐபிஎல் தொடரா?” என்ற கேள்விக்கு “இல்லவே இல்லை” என திடமாக சொல்லி இருந்தார் தோனி. 

இந்நிலையில் அவர் 2021 ஐபிஎல் சீசனுக்காக சென்னை அணியை வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார். அந்த அணி வரும் 10ஆம் தேதியன்று டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் தான் இதனை சொல்லியுள்ளார் காசி விஸ்வநாதன். 

“எனக்கு தெரிந்து இது அவரது கடைசி சீசனாக இருக்க வாய்ப்பில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டும்தான். அதனால் நாங்கள் மாற்று கேப்டன் என யாரையும் பரிசீலிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். 

image

தோனி சென்னை அணியை ஐபிஎல் ஆட்டத்தின் முதல் சீசனில் இருந்து இன்றுவரை வழிநடத்தி வருகிறார். மொத்தமாக சென்னை அணி விளையாடிய 12 சீசன்களில் அவர்தான் கேப்டன். அதில் கடந்த முறை மட்டுமே அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்