Published : 07,Apr 2021 08:28 PM

சிக்னல் செயலியை பயன்படுத்திய வாட்ஸ் அப் உரிமையாளர் மார்க் ஸக்கர்பர்க் - "லீக்" ஆன தரவுகள்!

வாட்ஸ் அப் உரிமையாளரான மார்க் ஸக்கர்பர்க், சிக்னல் செயலியை பயன்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ் அப் செயலியை, மார்க் ஸக்கர்பர்க்கின் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அண்மையில், ஃபேஸ்புக் பயனாளர்களின் தரவுகள் சட்டவிரோதமாக வெளியாகின. அதில், நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க்கின் விவரங்களும் அடங்கும்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தகவல் பரிமாற்றத்துக்காக தனது சொந்த நிறுவனமான வாட்ஸ் அப் செயலியை மார்க் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு தகவல்தொடர்பு செயலியான சிக்னலை பயன்படுத்தியுள்ளார். சொந்த நிறுவனத்தின் செயலியையே பயன்படுத்தாத மார்க்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்