Published : 22,Jul 2017 12:01 PM
சிக்சர் அடிக்கும் போட்டி: சென்னை வந்தார் தோனி

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இதில் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மொகித் ஷர்மா, பத்ரிநாத், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட முன்னாள் கேப்டன் தோனி சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். சிக்சர் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து முதலாவது ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது.