[X] Close

உ.பி: 5 வயது மகளை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

குற்றம்

Man-rapes-step-daughter-for-5-years-in-Sardhana-accused-still-at-large

5 வயது மகளை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக தந்தை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானா தெஹ்ஸில் கலந்த் கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான பாலியல்  வன்கொடுமை சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரு ஆண், தனது 5 வயது மகளை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் ரகசியமாக அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

புகாருக்குள்ளான சிறுமியின் தந்தை தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு பிரிந்து, தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை அழைத்து அதிகாரிகள் விசாரித்ததில் தனது தந்தையின் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது நிரூபணமானது. இதையடுத்து சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாகியிருக்கும் அவரை  தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close