Published : 25,Mar 2021 09:55 PM
பெங்களூருக்குள் வெளிமாநில நபர்கள் செல்ல கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம்

பெங்களூரு நகரத்திற்குள் வெளிமாநில நபர்கள் செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரத்தில் மட்டும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்து நானூறை கடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் வெளியிட்டுள்ளார். உருமாறிய கொரோனா வேகமாக பரவுவதாகவும் எனவே மக்கள் 2 மாதத்திற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
திருமணம் உள்ளிட்ட விழாக்களில் மூடப்பட்ட அரங்கில் 200 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திறந்த வெளிகளில் நடக்கும் விழாக்களில் 500 பேருக்குமேல் கூட அனுமதி இல்லை என்றும் அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.