Published : 25,Mar 2021 01:42 PM

"2 லட்சம் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி"- செலவினை ஏற்கும் ஸ்விக்கி

Swiggy-to-sponsor-corona-vaccine-for-employees

தங்கள் நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆகும் செலவினை ஏற்றுக்கொள்வதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக 45 மற்றும் அதற்கு மேல் வயதுடைய 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்று முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் சுந்தர் தெரிவித்துள்ளார். எனவே அதற்கு முன்னுரிமை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதனால் ஏற்படும் வருமான இழப்பினையும் ஈடுகட்ட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்