Published : 22,Jul 2017 05:01 AM
மனைவியுடன் ஜாலி ரோகித்: வைரலாகும் போட்டோ!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா, இப்போது இலங்கையில் இருக்கிறார். காயம் காரணமாக கடந்த சில டெஸ்ட் தொடர்களில் ஆடாத ரோகித் இலங்கை தொடரில் ஆட இருக்கிறார். இந்நிலையில் அவர், மனைவி ரித்திகாவுடன் ஜாலியாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தின் கீழே, ‘இதற்கு மேல் கேட்கக் கூடாது’ என்று கூறியுள்ளார். கடற்கரையில் இருவரும் அமர்ந்துள்ள இந்தப் படத்தை யார் எடுத்தது என்று தெரியவில்லை.