[X] Close

100 அடி ஆழம்; 4 அடிதான் தண்ணீர் - ஆனாலும் தற்கொலைக்கு முயன்று தப்பிய காதல் தம்பதி!

தமிழ்நாடு

Couple-decides-for-suicide-rescued-after-falling-into-100-feet-dry-well

தேனி அருகே பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தோட்டப்பகுதியில் குடியிருந்து வருபவர் முத்துமாரி(38). இவரது கணவர் இறந்த நிலையில் துர்கேஸ்வரன் (21) துர்காதேவி (20) வைஷ்ணவி (18) என்ற மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மகன் துர்கேஸ்வரன் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே துர்கேஸ்வரனும் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர்யா (18) என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஐஸ்வர்யா, காதலன் துர்கேஸ்வரனை திருமணம் செய்து அவர் வீட்டிலே கடந்த ஒரு வாரமாக வசித்து வருகிறார்.


Advertisement

image

இந்நிலையில், ஐஸ்வர்யாவின் மாமா அழகேசன் துர்கேஸ்வரன் வீட்டிற்கு வந்து தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கூறி ஐஸ்வர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜஸ்வர்யா வீட்டிற்கு வெளியே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட துர்கேஸ்வரனும் செய்வதறியாமல் கிணற்றில் குதித்தார். ஆனால் கிணற்றில் தரையில் இருந்து 4 அடி மட்டுமே தண்ணீர் இருந்ததால் இருவரும் காயங்களுடன் உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி இருவரையும் பத்திரமாக மீட்டனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close