[X] Close

நாமக்கல்லில் இறந்து போனவர் கழிப்பறை கட்டிய அதிசயம் 

It-is-a-miracle-that-we-have-died-in-Build-toilets-Namakkal

இறந்துபோனவரும், வீடே கட்டாத நபரும், ஊரிலேயே இல்லாதவரும் கழிப்பறைகளைக் கட்‌டி தலா 12 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அதிசய‌ம், நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

திறந்த வெளி கழிப்பறைகள் இல்லாத தூய்மை பாரதம் உருவாக, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட அரசு சார்பில் ‌12 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தூய்மை பாரதம் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி ஊரக ‌வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இந்த மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளைகளத்தூர் கிராமத்தில் பல மோசடிகள் நடைபெற்றிருப்பது தகவலறியும் உரிமைச் சட்ட விவரம் மூலம் தெ‌ரியவந்திருக்கிறது.  2015-ம் ஆண்டே இறந்துபோன ரங்கசாமி என்பவர் பெயரில் கழிப்பறை கட்டப்பட்டதாகவும், அவருக்கு 2016-ம் ஆண்டு 12 ஆயிரம் ரூபாய் பணம் தரப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது.

ஊரைவிட்டு வெளியேறியவர்கள் பெயரிலும், வீடே கட்டாத நபரின் பெயரிலும் கழிப்பறை கட்டப்பட்டதாகவும், அவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவலறியும் உரிமைச் சட்ட விவரம் மூலம் பெறப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close