[X] Close

அம்பானி வீடருகே காரில் வெடிபொருட்கள் வைத்தது நாங்கள்தான் - பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு

இந்தியா

Jaish-Ul-Hind-claims-responsibility-for-dumping-SUV-with-20-gelatin-sticks-near-Mukesh-Ambani-Antilia

முகேஷ் அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருட்கள் வைக்கப்பட்ட சம்பத்திற்கு, ஜெய்ஷ்-உல்-ஹிந்த் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர ‘அன்டிலா' அடுக்குமாடி வீடு, மும்பை அல்டாமவுன்ட் சாலையில் உள்ளது. 27 மாடிகளை கொண்ட இந்த வீட்டின் அருகே கடந்த வியாழக்கிழமை வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் இருந்து 20 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த காரில் இருந்து மிரட்டல் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், 'இது ட்ரெயிலர்தான், அடுத்த முறை குண்டு வெடிக்கும்' என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து அம்பானியின் வீடு அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

image


Advertisement

வெடிபொருட்களுடன் கார் நின்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, காரை நிறுத்தியவர் மற்றொரு யுனோவா காரில் தப்பிச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு உள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் காரை நிறுத்தி வைத்ததற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த மாதம், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் நடந்த தாக்குதலுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close