’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் நடிகை சமந்தா சினிமாவுக்கு வந்து இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
திருமணம் ஆனாலும் தமிழ் தெலுங்கில் தற்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இப்படம், கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியானது. சிம்பு, த்ரிஷா, சமந்தா, கெளதம் மேனன் ஆகியோரின் வாழ்க்கையில் முக்கியப் படமாக அமைந்தது. இப்போதும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்தளவிற்கு படமும் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. தமிழ் விண்ணைத் தாண்டி வருவாயாவில் சமந்தா சிறிய கேரக்டரில் மட்டுமே நடித்திருந்தார்.
ஆனால், தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமந்தா அறிமுகமானது ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில்தான். ஆனால், முதலில் வந்தது விண்ணைத்தாண்டி வருவாயாதான். இப்படமே சமந்தாவை தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக்கியது.
விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு, ராம் சரண் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில், சமந்தா சினிமாதுறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#11yearanniversary Thankyou @menongautham for seeing something in me?♀️..something that I really didn’t see in myself.. Thankyou @ManjulaOfficial ? and Thankyou @chay_akkineni ❤️.. and Thankyou to all of you reading this .. you have made me the happiest woman in the world pic.twitter.com/33mhB49IcL — Samantha Akkineni (@Samanthaprabhu2) February 26, 2021
அதோடு, அவருக்கு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்