Published : 19,Jul 2017 01:34 PM

ரஜினிகாந்த்தா? கமல்ஹாசனா?.... அரசியலில் தளத்தில் முந்திக் கொள்வது யார்?

Rajinikanth-KamalHassana-head-of-politics

தமிழக அரசியலில் பன்நெடுங்காலமாக திரைத்துறையினரின் தாக்கம் இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. தற்போது ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அரசியலில் நுழைவார்களா? என்ற கேள்விதான் தற்போது பரபரப்பாக மக்கள் பிரச்னைகளுக்காக பெரிய அளவில் குரல் கொடுக்காத அவர்கள் இருவரும், அரசியலில் குதித்து முதல்வராக வேண்டும் எனக் கனவு காண்பதா? என்கிற விமர்சனமும் எழாமல் இல்லை.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று கடந்த 1996-ல் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு, அரசியலில் அவர் நுழைவதற்கான முதல்படியாக அப்போது கருதப்பட்டது. பின்னர் திமுக ஆதரவு, பாமக எதிர்ப்பு என பல தேர்தல்களில் அவர் ஒரு நிலைப்பாடு கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அரசியல் பிரவேசம் பற்றி அவர் நேரடியாக எதுவும் கூறாததால், ரஜினியின் 'வாய்ஸ்' இனி எடுபடாது எனவும் ஒரு கட்டத்தில் முணுமுணுக்கப்பட்டது.. இத்தகைய சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், 'சிஸ்டம் சரியில்லை' போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் எனப் பேசி் மீண்டும் ஒரு விவாதத்திற்கு வித்திட்டார். ரஜினியின் பேச்சை வைத்து அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாதம் சூடு பிடித்தது.

பிறகு ரஜினிகாந்த் எதுவும் பேசாமல் அமைதி காத்த நேரத்தில், தமிழக அரசில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாக கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தற்போது விவாதப் பொருளாகிவிட்டது. 'சிஸ்டம் சரியில்லை' என பொத்தாம் பொதுவாகக் கூறியதால் ரஜினி மீது பாயாத விமர்சனக் கணைகள், நேரடியாக ஆட்சியாளர்களைச் சாடியதால், கமல் மீது கடுமையாகப் பாய்ந்து வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பலாமா என்ற ஆசை ரஜினிகாந்திற்கும், கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவர்கள் இருவரும் நண்பர்கள் என்றபோதிலும், அரசியலில் நேரடியாகக் கால் பதிப்பதில் யார் முந்திக் கொள்வர் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். கமல் சற்று உறுதியான மனப்பான்மையுடன் பேசி் வருவதாகவும் அவர்தான் அரசியலில் முந்திக்கொள்வார் என்றும் பேசப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தபோது எதுவும் பேசாத இவ்விரு நடிகர்களும், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்ததே இல்லை என்பது அவர்களை விமர்சிக்கும் அரசியல்வாதிகளின் கருத்தாகும். இவ்விரு நடிகர்களும் அரசியலில் நுழைவது அவர்களது விருப்பம். உரிமையும் கூட. ஆனால், வெற்றி  பெறுவது மக்களின் கையில்தான் உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்