[X] Close

"தோனி பாயுடன் மஞ்சள் ஜெர்ஸியில் விளையாட இருக்கிறேன்!" - புஜாரா குதூகலம்

விளையாட்டு

I-will-be-playing-with-Dhoni-bhai-again-says-Pujara

சிஎஸ்கே அணிக்காக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறார் புஜாரா. ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார்.

image


Advertisement

ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணி தன்னை தேர்ந்தெடுத்தது குறித்து வீடியோ பதிவொன்றை புஜாரா வெளியிட்டுள்ளார். அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


Advertisement

அதில் "ஐபிஎல் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இப்போது மீண்டும் தோனி பாயுடன் விளையாட இருக்கிறேன். அவரின் தலைமையில் கீழ்தான் நான் முதல் முதலாக இந்தியாவுக்காக விளையாடினேன். அவருடன் விளையாடிய நாட்களை எப்போதும் நான் மறந்தது இல்லை. எப்போதும் அது என் நினைவில் இருந்தது" என்றார் புஜாரா.

மேலும் பேசிய புஜாரா "ஐபிஎல்லை பொறுத்தவரை அது பெரிய விஷயமல்ல. என்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டி மனநிலையில் இருந்து டி20 மனநிலைக்கு மாற வேண்டும். அவ்வளவுதான். அதற்கு ஏற்றார் போல எவ்வளவு வேகமாக தயாராக வேண்டுமோ அத்தனை வேகமாக தயாராக வேண்டும். என்னால் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார் அவர்.


Advertisement

Advertisement
[X] Close