Published : 18,Feb 2021 04:41 PM
பேட்டிங் தரவரிசையில் முதலிடம்; ஐபிஎல் ஏலத்திலோ அடிப்படை விலை - பரிதாபத்தில் டேவிட் மாலன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 ஸ்பெஷலிஸ்ட் பிளேயரான டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் 915 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு புள்ளிகளுடன் யாரும் முதலிடத்தில் இருந்தது இல்லை. இந்நிலையில் அவர் இந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டார்.
அவரது அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாகும். அவரை பெரும்பாலான அணிகள் ஏலத்தில் எடுக்க முன் வராததால் டேவிட் மாலனை அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 19 இன்னிங்ஸ் விளையாடியுள்ள மாலன் 855 ரன்களை அடித்துள்ளார். அதில் 9 அரை சதங்களும், 1 சதமும் அடங்கும்.
Da-??? us! ??#SaddaPunjab #PunjabKings #IPLAuction2021 pic.twitter.com/IBu3mmqOAB
— Punjab Kings (@PunjabKingsIPL) February 18, 2021
அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 149.48. பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லுக்கு மாற்றாக மாலனை ஏலத்தில் அடிப்படை விலைக்கே தட்டி தூக்கியுள்ளது.