[X] Close

மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியா

Gujarat-CM-Vijay-Rupani-tests-positive-for-COVID-19-admitted-to-hospital

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  


Advertisement

குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரை வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குஜராத்தின் வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் நேற்று விஜய் ரூபானி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

image

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  


Advertisement

இந்நிலையில் ரூபானியின் சளி மாதிரி ஞாயிற்றுக்கிழமை இரவு சேகரிக்கப்பட்டு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, துணை முதல்வர் நிதின் படேல் கூறுகையில், தற்போது விஜய் ரூபானி உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close