Published : 08,Feb 2021 07:25 AM

சசிகலா தங்கியிருந்த ரிசார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை கொளுத்திய கன்னட அமைப்பு!

Kannada-Language-Activist-burned-the-posters-and-banners-which-was-place-in-Bengaluru-for-welcoming-VK-Sasikala-from-Prison-to-TN

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முழுமையாக நிறைவு செய்துள்ள சசிகலா இன்று பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்ப உள்ளார். இந்நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக வழிமுழுவதும் ‘வருக… வருக…’ என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு தொடங்கி சென்னை வரை ஆங்காங்கே சசிகலாவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆற்காடு பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் குறித்தும் புதிய தலைமுறையில் செய்தி வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் பெங்களூருவில் கன்னட மொழி ஆர்வலர்கள் சிலர் சசிகலா தங்கியிருந்த ரிசார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். சசிகலா படத்தை தாங்கியுள்ள பேனர்களையும் கிழித்து, அதை எரித்துள்ளனர் அவர்கள். 

“சசிகலா மீது எங்களுக்கு எந்தவித கோபமும் இல்லை. எங்களுக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது தான் பிரச்சனை. அதனால் தான் எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம்” என ரக்ஷனா வேதிகா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்