[X] Close

வெளியானது ’த்ரிஷ்யம் 2’ ட்ரைலர்; ஓடிடியில் பிப்.19இல் ரிலீஸ்!

சினிமா

drishyam-2-trailer-release-amazon-prime

அதிக வரவேற்பை பெற்ற ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ட்ரைலரையும் வெளியீட்டுத் தேதியையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. இதனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.


Advertisement

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் “த்ரிஷ்யம்”. கேரள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படம் என தனி முத்திரை பதித்தது. திரையிடப்பட்ட அரங்குகளிலெல்லாம் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையோடு, பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த வெற்றிக்குப்பின்தான் “த்ரிஷ்யம்” படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்தான்.

image


Advertisement

த்ரில்லர் கதைக்கருவை குடும்பத்தோடு இணைத்திருந்த ’த்ரிஷ்யம் 2’ படத்தின் அதிக சதவீத படப்பிடிப்பும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு சமீபத்தில்தான் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை புத்தாண்டு அன்று 12 மணிக்கு  நடிகர் மோகன்லால் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலரையும் வெளியீட்டு தேதியையும் மோகன்லால் அறிவித்துள்ளார். அமேசான் ப்ரைமில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் உலகம் முழுக்க வெளியாகிறது ’த்ரிஷ்யம் 2’.  ட்ரைலரில் ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தினரோட பழைய பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், ’அவர்கள்’ விடுவதாக இல்லை’ என்பதை உணர்த்துகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close